Thursday, August 18, 2011

மனைவியைப் பிரியாதே!


fawzeen
elamalpotha
wahacotte
galewela
srilanka
+94775525685











மனைவியைப் பிரியாதே!PrintE-mail

மனைவியைப் பிரியாதே – குறுந்தொகை!
 [ இயன்றவரை உள்நாட்டில் தொழில், வியாபாரம் செய்து பிழைக்கவும் குடும்பத்தோடு வாழவும் வழி தேடவேண்டும். இயலாது போனால் அதிக பட்சம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன ஆறுமாத காலத்திற்குள்ளாக மனைவியிடம் திரும்ப வேண்டும்.
நேற்றைய பதிவுகள் சங்க கால வாழ்வை நமக்கு முன்னிறுத்துவது போல் நாளைய பதிவுகள் இன்றைய சமூக வாழ்வை முன்னிறுத்தும். குடும்பத்தின் நீட்சியும், கௌரவமும் மனைவியிடம் உள்ளதை உணரவேண்டும். அதற்காகவே இந்த பதிவு.]
சங்க இலக்கியம் எட்டுத் தொகையில் குறுகிய அடிகளையுடையதால், ‘‘குறுந்தொகை’’ என்றழைக்கப்படுவது, 206 புலவர்கள் பாடிய 401 பாடல்கள், இளம்பூரணார் உள்ளிட்ட உரையாசிரியர்கள் குறுந்தொகைப் பாடல்களிலிருந்து மேற்கோள்காட்டியிருப்பதே அதன் தனிச் சிறப்பு.
பொருள் தேடச் செல்வதற்காக தலைவியை பிரிய நினைக்கிறான் தலைவன். அன்பு, ஆசை துறந்து, பொருள் தேடுவதற்காகப் துணையை பிரிவது அறிவுடைய செயலாகாது என்று தலைவனுக்குத் தலைவி எடுத்துரைப்பதாக கோப்பெருஞ்சோழன் பாடும் பாடல்
(20) அருளும் அன்பும் நீக்கித்துணை துறந்து / பொருள் வயிற் பிரிவோர் உரவோர் ஆயின் / உரவோர் உரவோர் ஆக / மடவம் ஆக மடந்தை நாமே.
அருள் - இரக்கம்.
அன்பு - பிரியம்.
துணை துறந்து - மனைவியை விட்டு.
பொருள் வயிற் பிரிவோர் - பொருள் தேடுவதற்காக கணவன் மனைவியைப் பிரிவோர்.
உரவோர் ஆயின் - வலியோர் ஆனால்.
மடவம் - பேதமை.
மடந்தை நாமே - பெண் நாமே.
பொருள் தேடச் சென்ற தலைவன் கிடைத்த பொருளைக் கொண்டு திரும்புவேன் என்று கூறிச் சென்று நீண்ட நாட்களாகியும் திரும்பாமலிருப்பது நல்ல செயல் அல்ல. எனது துயரை அவர் அறியவில்லையே என்று மனம் பேதலிக்கும் தலைவிக்கு தோழி ஆறுதல்வார்த்தை கூறுகிறாள்;
துணைவன் பிரிவால் வாடும் தலைவியே கூடிய விரைவில் உன் துணைவர் உன்னிடம் வந்து சேர்வார் என்பதாக மோசிகீரனார் பாடும் பாடல்
(59) பதலைப் பாணிப்பரிசிலர் கோமான் / அதலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டு சுனைக் / குவளையடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் / தவ்வென மறப்பரோ மற்றே முயலவும் / கரம் பல விலங்கிய அரும் பொருள் / நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.
பதலைப் பாணி - வாய் அகன்ற பறை ஒலி.
பரிசிலர் கோமான் - அரசனிடத்தில் நன்கொடை கேட்டு நிற்பவர்.
அதலைக் குன்றம் - கீழுலகில் சிறுமலை.
அகல்வாய்க் குண்டு சுனை - அகன்ற வாயுடைய உருண்டை வடிவப் பாத்திரத்தில் மலை ஊற்று.
குவளையடு பொதிந்த - செங்கழு நீர்ப்பூ நிறைந்த.
குளவி நாறு நறு நுதல் - மலை மல்லிகை நாற்று மணம் மேலிட.
தவ்வென மறப்பரோ - குவிதலை மறந்து விடுவாரோ.
கரம் பல விலங்கிய - கை கலங்கிய.
அரும்பொருள் - செல்வம் பெற.
நிரம்பா ஆகலின் நீடலோ - நிறைதல் ஆகாமல் முழுவதும் நீளுதலோ.
கணவன் நுகர்ந்து சென்ற என் பெண்மை பெரிய யானையால் ஒடிக்கப்பட்ட மரக்கிளைபோல் கிழேயும் விழாமல் வாடியும் உலராமல் நாரின் தொடர்பினால் தலைக்கும் நிலைபோல் உள்ளது. ஊரார் தூற்றுதலுக்கு பயந்து என் ஆசை, உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தாமல் இருக்கிறேன் என்று தனது நிலைப்பாட்டை தோழிக்கு தலைவி எடுத்துரைப்பதாக ஆலந்தூர் கிழார் பாடல்
(112) கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் / எள் அற விடினே உள்ளது நாணே / பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ / நாருடை ஓசியல் அற்றே / கண்டிசின் தோழி அவர் உண்டான் நலனே.
கௌவை அஞ்சின் - பிறர் கூறும் மொழிக்கு பயந்தால்.
காமம் எய்க்கும் - ஆசை அம்பு செலுத்தும்.
எள் அறவிடினே - சிறியது முற்றிபெரிதாக உதயமானால்.
நாணே - வெட்கமே.
பெருங் களிறு - பெரிய ஆண்யானை.
வாங்க - அழைக்க.
முரிந்து படா - பெருங்கொடி நீங்கியது.
நாருடை ஓசியல் அற்றே - கிளையின் நரம்பு பெறுவது அவ்வளவே.
கண்டிசின் தோழி - கண்டேன் தோழி.
அவர் உண்ட - அவர் நன்றி.
சங்க காலப் பெண்கள் கணவனைப் பிரிந்து கைசேதப்பட்ட நிலை பிரிவால் எழும் துயரைப் பார்த்தோம். அதே நிலை இன்றைய பெண்களின் வாழ்விலும் நேற்றும் தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது. மணம் செய்த மனைவியை உள்-ளூரில் விட்டு பொருளீட்டுவதற்காக ஆண் அயல் தேசம் செல்வது பெண்கள் வாழ்வை பாலைவனம் ஆக்குவதோடு சமூகச் சீரழிவிற்கு வித்திடுகிறது.
இயன்றவரை உள்நாட்டில் தொழில், வியாபாரம் செய்து பிழைக்கவும் குடும்பத்தோடு வாழவும் வழி தேடவேண்டும். இயலாது போனால் அதிக பட்சம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன ஆறுமாத காலத்திற்குள்ளாக மனைவியிடம் திரும்ப வேண்டும்.
நேற்றைய பதிவுகள் சங்க கால வாழ்வை நமக்கு முன்னிறுத்துவது போல் நாளைய பதிவுகள் இன்றைய சமூக வாழ்வை முன்னிறுத்தும். குடும்பத்தின் நீட்சியும், கௌரவமும் மனைவியிடம் உள்ளதை உணரவேண்டும். அதுவே சங்க இலக்கியம் சொல்லும் பாடம்.
fawzeen
-

நல்ல கணவனின் நற்பண்புகள்


fawzeen
elamalpotha
wahacotte
galewela
srilanka
+94775525685


நல்ல கணவனின் நற்பண்புகள்PrintE-mail

''உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!''
கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக்கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதோ, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆண்களை எச்சரிக்கிறார்கள்:
"பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.'' (நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
"பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.''(நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
"பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் 'தலாக்' விடுவதாகும்.'' (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, 'விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்' என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.
சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி அவர்கள், 'பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!
பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.'' (நூல்: ஜாமிவுத் திர்மிதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.
பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!'' (நூல்: ஜாமிவுத் திர்மிதி)
இந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்' என்று வலியுறுத்துகிறது.
சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக "முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்'' என்று கூறினார்கள். (நூல்: ஸுனன்் அபூதாவூத்)
நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.
மேலும், "அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.'' (அல்குர்ஆன்: அன்னிஸா 4:19)
இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் "உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?'' என்று அறிவுரை கூறினார்கள்.
இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.
எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
"முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது'' என மகத்தான இறைத்தூதர் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபி அவர்கள் கூறினார்கள்: "எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.'' (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2915)
உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். (அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 19160)
''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். 9அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 56)
ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162)
''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082)
fawzeen

நல்ல மனைவியரின் நற்குணங்கள்


fawzeen
elamalpotha
wahacotte
galewela
srilanka
+94775525685









நல்ல மனைவியரின் நற்குணங்கள்PrintE-mail

பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும்.
ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்." (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்;
''நிரோகரிப்போருக்கு, (நபி) நூஹீடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகச் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்குக்கீழ் (மனைவியராக) இருந்தனர், பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர், ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் (நபிகளாகிய) அவ்விருவராலும் தடுக்க முடிய வில்லை, (இவர்கள்) துரோகம் செய்ததன் காரணமாக, இவர்களிடம்), ‘ நரக நெருப்பில் நுழைவோர்களுடன் நீங்களும் நழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டது.'' (திருக்குர்ஆன் 66:10)
மேலும் அல்லாஹ் குறிப்பிடும் போது, எகிப்து நாட்டை ஆட்சி செய்து, தன்னுடைய அதிகாரங்களால் பலருக்கு மிகவும் கொடுமைகளை புரிந்த பிர்அவ்னின் மனைவியின் குணத்தையும் பற்றியும் சொல்கிறான்,
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் ‘இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.’ (திருக்குர்ஆன் 66:11)
நல்ல மனைவியானவள் இரத்த பந்த உறவு முறைகளை முறிக்காமலும், கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடியவளாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய பெற்றோர்களிடமும், மற்றும் குழந்தைகளிடமும் எந்த மாதிரியாக நடந்துக்கொள்ள வேண்டும். வெளி இடங்களிலும், வெளி நபர்களிடமும், பொது இடங்களிலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற மனைவிகளுக்குரிய பல பங்குகளை பற்றி திருமறையானது பல இடங்களில் குறிப்பிடுகிறது.
ஒரு மனிதன் எவ்வளவு தான் நன்னடத்தையுள்ளவனாக இருந்தாலும் சரிதான். அவனுடைய மனைவி நன்னடத்தை உடையவளாக இல்லையெனில், அவனால் ஒரு போதும் இவ்வுலகில் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் வாழ்ந்திட முடியாது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
''உலகின் அனைத்துப் பொருள்களும் அனுபவிப்பதற்காக உள்ளவைதாம்! அவற்றில் சிறந்த பொருள் நன்னடத்தை உள்ள மனைவி!'' (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், மிஷ்காத்)
குடும்பம் என்பது புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தான் இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வின் அவசியத்தினை மனைவிமார்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் புகுந்த வீடுகளில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். ஒரு சில குடும்பங்களில் எந்த புரிந்துணர்வும் இல்லாத பட்சத்தில் தான் சிறு பிரச்சனைகள் பூதகாரமாக மாறி விடுகிறது.
பெண்களை ஏக இறைவன் பலஹீனமாக படைத்து உள்ளான். ஆகையால் தான் அவர்கள் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியாமல் சோர்ந்து போய் கவலையும் அடைகிறார்கள். ஒவ்வொரு இல்லங்களிலும் ஏதேனும் பிரச்சனை எப்படியாவது வந்தே தீரும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்ன முடிவு என்பதினை பற்றி கணவன் மற்றும் மனைவி கலந்து ஆலாசிக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தினை பற்றியும் மனம் திறந்து பேச வேண்டும்; என்பதினை இருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் பிரச்சனை அதிகளவில் உருவாகி கணவன் மனைவி பிரிவினைக்கும் காரணமாக அது அமைந்து விடும்.
‘இன்னும் (கணவன் மனைவியாகிய) இருவருக்குள், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால், அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும், அவள் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும் நீங்கள் (ஏற்படுத்தி) அனுப்புங்கள், அவ்விருவரும் (இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டு பண்ண நாடினால், அல்லாஹ் இவ்விருவரையும் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) தெரிந்தவனாக,நன்கு உணர்கிறவனாக, இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன் 4:35)
புகுந்த வீடு, புதிய சூழ்நிலை, மாமியார், நாத்தனார் மற்றும் புதிய முகங்கள் என்று புதுமையாக இருக்கும் திருமணம் புரிந்த புதிதில் மனைவிமார்களுக்கு. எல்லாவற்றிற்கு மனம் பொறுத்து போனால் எல்லாம் நன்மையே நடக்கும் என்பதினை எண்ணிக்கொண்டால் குடும்பம் ஒளிர வாய்ப்புண்டு.
பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும்.
குடும்பத்தில் கணவன் ஒரு சிறு துளி அன்பு செலுத்தினாலும், அவள் குடும்பத்தினை நல்ல மாதிரியாக கொண்டு செல்லுவாள். மனைவியானவள் குடும்பத்தில் உள்ள எல்லோருடைய மனங்களையும் புரிந்து அவர்களை எப்போதும் சந்தோஷமாக குளிர வைக்க தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
‘(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன.’ (திருக்குர்ஆன் 30:21)
குடும்பம் நல்ல மாதிரியாக இருக்க வேண்டுமானால், புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மனைவிக்கு இருக்குமாயின் அந்தக் குடும்பத்தில் காலை இளந்தென்றல் எந்நேரமும் வீசிக்கொண்டே இருக்கும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லேயே. ஒரு பெண் எல்லா விதத்திலும் குறையற்றவளாக இருப்பது சாத்தியமானதல்ல. அவளிடம் ஏதேனும் குறையோ பலவீனமோ இருந்தாலும் அதே நேரத்தில் அவளிடம் சில நல்ல அம்சங்களும் இருக்கலாம். ஆகையால் ஒரு நல்ல கணவன் மனைவியின் இருபுறங்களையும் பார்த்திடல் வேண்டும்.
மனைவியானவள் தன்னுடைய குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அவசியத்தினை பற்றி நாள் தோறும் சொல்லி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உலகக் கல்வியுடன் சேர்ந்து மார்க்க கல்வியினையும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் அந்த பிள்ளைகள் இரு உலகிலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. மார்க்கப்பற்றுள்ள பிள்ளைகளை உருவாக்க நம்மால் முடியும் என்பதினை ஒவ்வொரு மனைவியும் தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து கொள்ள வேண்டும்.
இன்றைய காலக்கட்டங்கள் பிள்ளைகள் வீணாக சுற்றி திரிய கூடிய சூழ்நிலைகளால் சூழப்பட்டு உள்ளது. ஆகையால் நாம் தான் சந்ததிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதினை தாயாக மாறக்கூடிய மனைவிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வுலகம் வீண் விரயமும் மற்றும் ஆடம்பரமும் கலந்தே உள்ளதாக இருக்கிறது. ஆகையால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பதினை மனைவிமார்கள் தெரிந்து கொண்டு பிள்ளைகளை நன் முறையில் வளர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றும் வாசனை திரவியங்கள் அதிகளவில் பூசக்கூடாது. ஏனெனில் வெளி நபர்கள் கவனம் நம் மீது திரும்புவதற்கு இது ஒரு காரணமாக நாமே அமைத்துத் தரக்கூடாது. ஒப்பனை மற்றும் அலங்காரங்கள் நம்முடைய கணவனுக்கு மட்டுமே உரியது. பிறருக்காக அல்ல என்பதினையும் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மற்றும் வெளியே செல்லும் போது கணவனின் அனுமதியை பெற்று தான் செல்ல வேண்டும். கணவனின் அனுமதி இல்லாமல் செல்லும் மனைவிகளை அவர்கள் செல்லும் வழியெங்கும் மலக்குமார்கள் சபிக்கிறார்கள். வெளி நபர்கள் முன்பாக வருவதில் மனைவிகள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதனையும் இந்த குர்ஆன் வசனம் தெளிவாக நமக்கு காட்டுகிறது.
‘(நபியுடைய மனைவியர்) தங்களுடைய தந்தைகள் (முன்பாகவும்), தங்கள் ஆண் மக்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரிகளின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் பெண்கள் (முன்பாகவும்), தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களி(ன் முன்பாக வருவதி)லும் அவர்களின் மீது குற்றமில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:55)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்." (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
இன்ஷா அல்லாஹ், நாளை: ''நல்ல கணவனின் நற்பண்புகள்!''
fawzeen

கரை தாண்டும் கணவனும் கறை படியும் மனைவியும்!


கரை தாண்டும் கணவனும் கறை படியும் மனைவியும்!PrintE-mail
 
ஹிஷாம் எம்.ஐ.எஸ்.ஸி.
[ அடிப்படையான நிபந்ததை என்னவென்றால் திருமணமானவர் வெளிநாடு சென்று பொருளாதரத்தை திரட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக தன்னுடைய மனைவியையும் அங்கு அழைத்துச் செல்லவேண்டும். அவ்வாறு அழைத்து செல்ல முடியாத பட்சத்தில் அங்கு சென்று சம்பாதிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கணவன் மனைவியிடத்தில் கோபப்படும் போது மனைவியுடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்வதற்கு ''ஈளா'' என்று கூறப்படும். ஆனால் இஸ்லாம் இந்த ஈளாவுக்கும் வழங்கக்கூடிய வரையரை நான்கு மாதங்கள் தான்.
மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை இஸ்லாம் கண்டிக்கிறது என்றால் பொருளாதாரம் திரட்டுவதற்கு தன்னுடைய மனைவியைப்பிரிந்து வெளிநாடு செல்வதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்காது.
நம்முடைய பாலியல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக தான் இஸ்லாம் திருமணத்தை வழியுருத்துகிறது. ஒருவர் திருமணம் முடிக்க சக்தி உள்ளவாராக இருந்தால் கண்டிப்பாக திருமணம் முடித்தே ஆகவேண்டும். நம்முடைய ஆசையை கட்டுபடுத்திக் கொள்ள இஸ்லாம் இரண்டு வழிமுறைகளை கற்றுத்தருகிறது. அதாவது ஒன்று திருமணம் மற்றொன்று நோன்பு பிடித்தல்.
யாராக இருந்தாலும் இந்த இரு வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றினால் தான் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். திருமணம் முடித்து விட்டு பொருளாதாரத்தை திரட்டுவதற்காக மனைவியை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றார்கள். ஒருபோதும் இஸ்லாம் அதைனை அனுமதிக்கவே இல்லை. திருமணத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் வெளிநாடுகளில் தங்கி இருப்பதுதன்னுடைய மனைவிக்கும் செய்கின்ற துரோகமாகும்.
எனவே பெரிய அளவில் பொருள் திரட்டி தன் குடும்பத்தை பிரிந்து வாழ்வதை விட குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் சரி தன் குடும்பத்தோடு மகிழ்சியாக வாழ்வதே சிறந்தது.]
இன்றைய உலகத்தில் அனைத்து வியங்களும் பொருளாதாரத்தை மையமாக வைத்து அமைந்து இருக்கிறது.
கல்வியாக இருந்தாலும் கல்வி கற்பவர்களின் நோக்கமும் கல்வியை கற்றுக்கொடுப்பவர்களின் நோக்கமும் பொருளாதாரத்தை மையமாக வைத்து தான் அமைந்து இருக்கின்றது. நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதிகமான பொருளாதரத்தை திரட்டினால் தான் முடியும் என்ற நிலை.எனவே நாம் இந்த பொருளாதாரத்தை திரட்டுவதற்காக பல தியாகங்களை செய்தி பல வழிகளில் திரட்டுகிறோம்.
அதிகமானவர்கள் தங்களுடைய ஊர்களில் இருந்து வெளி ஊர்களுக்குச் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள்.இன்னும் சிலர் தங்களுடைய நாடுகளை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள.
பொருளாதாரம் அல்லாஹ்வின் அருள்
இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை அல்லாஹ்வின் அருள் என்றும் அதனை திரட்டுவதற்கு ஆர்வமும் ஊட்டுகிறது.
''சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.'' (அல்குர்ஆன் 4:32)
பொருளாதாரத்தை திரட்டி அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் மற்றவர்கள் அடையாத நன்மைகளை நமக்கு அடைய முடியும்.எனவே இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தடையாக நிற்பதில்லை. ஆனால் பொருளாதாரத்தை திரட்டுவதாக இருந்தால் தான் விரும்பியபடி திரட்ட முடியாது. அதற்கு இஸ்லாம் சில நிபந்தனைகளை இடுகிறது. அந்த அடிப்படையில் தான் நாம் பொருளாதாரத்தை திரட்ட வேண்டும்.வேண்டிய நாட்டிற்கு சென்று பொருளாதாரத்தை திரட்டலாம் ஆனால் அதற்கு இஸ்லாம் வரையரையை விதித்து இருக்கிறது.
அடிப்படையான நிபந்ததை என்னவென்றால் திருமணமானவர் வெளிநாடு சென்று பொருளாதரத்தை திரட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக தன்னுடைய மனைவியையும் அங்கு அழைத்துச் செல்லவேண்டும். அவ்வாறு அழைத்து செல்ல முடியாத பட்சத்தில் அங்கு சென்று சம்பாரிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் அதைனை வன்மையாக கண்டிக்கிறது.
திருமணத்தின் அவசியம்
மற்ற மதங்கள் மற்றும் சித்தாந்தங்களைப் போல் இல்லாமல் இஸ்லாமிய மார்கம் இறைவனை நெருங்குவதற்கு திருமணத்தை தடைக் கல்லாக அமைக்காமல் திருமணத்தை வழியுருத்திகிறது. இதன் காரணத்தினால் இன்று ஆன்மிகத்தின் பெயரால் ஏராளமான தவறுகள் நடப்பதைப் பார்கலாம். சாமியார்களின் பெயரில் எராளமான பாலியல் பலாத்காரங்கள் நிறைந்து காணப்படுகின்றது. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஒருவர் எவ்வளவு ஆன்மிகத்தில் மூழ்கிப்போனாலும் திருமணம் செய்யவில்லை என்றால் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றியவராகமாட்டார். எனவே இஸ்லாம் இளைஞர்களுக்கு திருமணத்தை வலியுருத்துகிறது.
நானும் அல்கமா மற்றும் அஸ்வத் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் ‘இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு யªத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவித்தார் நூல்: புகாரி 5066)
திருமணத்தின் நோக்கம்
நம்முடைய பாலியல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக தான் இஸ்லாம் திருமணத்தை வழியுருத்துகிறது.ஒருவர் திருமணம் முடிக்க சக்தி உள்ளவாராக இருந்தால் கண்டிப்பாக திருமணம் முடித்தே ஆகவேண்டும். நம்முடைய ஆசையை கட்டுபடுத்திக் கொள்ள இஸ்லாம் இரண்டு வழிமுறைகளை கற்றுத்தருகிறது. அதாவது ஒன்று திருமணம் மற்றொன்று நோன்பு பிடித்தல். இந்த இரண்டும் இல்லாமல் யார் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கொள்கிறார்கள் என்று கூறுகிறாறோ அவர் கண்டிப்பாக பொய்தான் கூறவேண்டும்.
யாராக இருந்தாலும் இந்த இரு வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றினால் தான் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இன்று நடக்கின்ற கொடுமை என்னவென்றால் திருமணம் முடித்து விட்டு பொருளாதாரத்தை திரட்டுவதற்காக மனைவியை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றார்கள். ஒருபோதும் இஸ்லாம் அதைனை அனுமதிக்கவே இல்லை. திருமணத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் வெளிநாடுகளில் தங்கி இருப்பது தன்னுடைய மனைவிக்கும் செய்கின்ற துரோகமாகும்.
மனைவிக்கு செய்யவேண்டிய கடமை
இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு அதிகமாக ஆர்வம் ஊட்டுகிறது.எவ்வளவு ஆர்வம் ஊட்டினாலும் மார்கத்தின் பெயரால் வணக்க வழிபாட்டில் ஈடுபடப்போகிறேன் என்று தன்னுடைய மனைவியை பிரிந்து இருப்பதையே இஸ்லாம் கண்டிக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.
பிறகு ’முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்" என்றார்.
இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்" என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்" என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்" என்று கூறினார்.
அப்போது இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார் நூல்: புகாரி 5063)
எனவே இஸ்லாம் திருமணத்தை வழியுருத்திக் கூறுவதுடன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையையும் வழியுருத்தி கூறுகிறது.மார்கத்தின் பெயரால் கூட அதற்கு பங்கயம் விளைவிக்காமல் கவனித்துக் கொள்கிறது இஸ்லாம்.
மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதையே இஸ்லாம் கண்டிக்கிறது என்றால் பொருளாதாரம் திரட்டுவதற்கு தன்னுடைய மனைவியைப்பிரிந்து வெளிநாடு செல்வதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்காது.
மனைவியை எவ்வளவு காலம் பிரிந்து இருக்கலாம்?
கணவன் மனைவியிடத்தில் கோபப்படும் போது மனைவியுடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்வதற்கு ஈளா என்று கூறப்படும். ஆனால் இஸ்லாம் இந்த ஈளாவுக்கும் வழங்கக்கூடிய வரையரை நான்கு மாதங்கள் தான்.
''தமது மனைவியருடன் கூடுவ தில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது அவர்கள் சத்தியத்தை திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன்.'' (அல்குர்ஆன் 2:226)
ஒருவர் தன் மனைவியை விட்டுப்பிரிந்து இருப்பதற்கு நான்கு மாதங்கள் தான் அனுமதி அழிக்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் நான்கு மாத காலங்களை விட கணவன் மனைவி பிரிந்து இருந்தார்கள் என்றால் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த தவறான வழியில் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவே தான் இஸ்லாம் அதிக பட்சமாக நான்கு மாத காலத்தை வழங்குகின்றது.
ஒருவர் தன் மனைவியை ''ஈளா'' செய்வதற்கே நான்கு மாத காலம் தான் வழங்கி இருக்கிறது என்றால் வேறு எந்த காரணத்தாலும் அதைவிட அதிகமான காலம் பிரிந்து இருப்பதற்கு அனுமதி இல்லை. அவ்வாறு பிரிந்து இருந்தால் கனவன் மனைவி இருவருக்கும் தன் கற்பை பாதுகாத்துக் கொள்வது கஷ்டமான விடயமாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தன் மனைவியை விட்டுவிட்டு ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அங்கு தங்கி இருப்பார்கள். இதனால் தன்னுடைய ஆசைகளை தீர்துக்கொள்ள முடியாத நிலமை.திருமணம் செய்தும் தவறான வழிக்கு அது தன்னை இட்டுச் செல்லும்.
வெளிநாடு செல்வதற்கான காரணம்.
அதிகமான மக்கள் வெளி நாடு செல்வதற்கு காரணம் என்னவென்றால் பணத்தின் மீதான பேராசை தான்.எவ்வளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் அதனை வைத்து தன்னிறைவு செய்து கொள்ள முடியாத நிலை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ''ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்னைத்தவிர வேறெதுவும் நிரப்பாது. திருந்து பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்'' (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நூல்: புகாரி 6439)
அது மட்டும் இல்லாமல் தன்னை மக்கள் மெச்ச வேண்டும் என்ற எண்ணம். தான் அடுத்தவர்களைவிட வசதியில் குறைவாக இருந்தால் மக்கள் தன்னை மதிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை. நாம் ஒருபோதும் அடுத்தவர்களுக்காக வாழக்கூடாது. அடுத்தவர்கள் பார்ப்பதற்காக வாழ்ந்து தன்னுடைய இளமை பருவத்தை வெளிநாடுகளில் வீணாக கழித்து விட்டு வயோதிப பருவத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து வாழ்கிறார்கள்.
அனைவரும் "தன்னுடைய வாழ்க்கயை வீணாக கழித்து விட்டோம்" என்று தாமதமாகத்தான் உணர்கிறார்கள். எனவே நாம் அடிப்படையான நம்பிக்கையை மறந்து விடக்கூடாது. அதாவது அல்லாஹ் நம்முடைய பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படுத்துவான் என்பதாகும். நாம் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் இஸ்லாம் அனுமதித்த விதத்தில் அதனை திரட்டினால் நிச்சியமாக அல்லாஹ் அதில் நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொடுப்பான்.
மனைவியின் கடமை
கணவன் வெளிநாடு செல்வதற்கு தன் மனைவியும் முக்கிய காரணமாக அமைகிறாள்.
தன் கணவன் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினார்; என்றால் மனைவி அதில் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் இருக்கும் என்று நம்பிக்கை கொள்ளாமல் தன் கணவனை இன்னும் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தூண்டுகிறார்கள். பெண்கள் வாழ்வில் சிக்கனத்தைக் கடைபிடிக்காமல் கணவனின் சம்பாத்தியத்தின் அளவில் குறை காணுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. கணவன் ஹலாலான முறையிலா பொருளீட்டுகிறான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ளாமைக் கவலைக்குரியது.
பக்கத்து விட்டில் ஒரு பெண் எதாவது ஒரு பொருள் வாங்கிளால் தனக்கும் அதே போல் வேண்டும் என்று தன்னுடைய கணவனின் நிலைமையை அறிந்தும் அறியாமல் அவர்களுக்கு தொல்லைகளை வழங்குகிறார்கள். எனவே தன் மனைவியின் ஆசையை நிரைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு வெளிநாடு செல்கிறார்கள்.எனவே ஒரு மனைவி தன் கணவனின் நிலையை உணர்ந்து அவர்கள் எதைக் கொடுத்தாலும் நல்ல முறையில் அதை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்தால் அவர்கள் வெளிநாடு சென்று உழைக்கவேண்டிய நிலை ஏற்படாது. கணவனுக்கு எப்போதும் உருதுனையாக மனைவிமார்கள் நிற்கவேண்டும். பெண்கள் தங்கள் கணவன்மார்களின் வருமானத்தில் திருப்தி காணாமையே கணவன்மார்கள் வெளிநாடு செல்வதற்கு மூல காரணமாக அமைகின்றது.
சீர் குலையும் குடும்பம்
கணவன் தன் மனைவியை விட்டு வெளிநாடு செல்வதினால் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. தன்னுடைய குடும்பம் எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியாத நிலையில் தான் குடும்பத் தலைவன் இருக்கிறான். தன்னுடைய மனைவி தவரான வழிக்குச் செல்வதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.அது மட்டுமல்லாமல் தன் குழந்தைகளைக்கூட தன்னுடைய கண்கானிப்பில் வளர்க்க முடியாத சூழ்நிலை. பிள்ளைகள் வீட்டில் இருக்கும் வரைக்கும் தாயின் கண்கானிப்பில் வளர்ந்து வரும். வெளியில் சென்றவுடன் தன்னை கண்கானிக்க யாரும் இல்லை என்ற நம்பிக்கையில் தவரான வழிக்கு செல்கிறார்கள். ஆனால் தந்தை இருந்தால் "தந்தை தன்னைப் பார்கக்கூடும"; என்ற பயத்திலாவது தவறு செய்வதை நிறுத்தி விடுவார்கள், அல்லது தந்தையிடம் யாராவது தன்னைப்பற்றி கூறிவிடக்கூடும் என்ற பயத்திலாவது தவறு செய்வதை நிறுத்தி விடுவார்கள்.
அது மட்டுமல்லாமல் குழந்தைகள் தந்தைப்பாசம் என்றால் என்வென்றே தெரியாமல் வளர்க்கப்படுகிறார்கள். தந்தை என்றாலே காசு அனுப்பக்கூடியவர் தான் என்ற அவர்களில் உள்ளத்தில் பதியப்படுகிறதே தவிர தந்தையின் பாசம் என்ன என்று கூட அவர்களுக்கு உணர முடிவதில்லை.
இன்னும் கவலைக்குறிய விஷயம் என்வென்றால் தாய் குழந்தைகளுக்கு தன் தந்தையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைமை. குழந்தைகள் தன் தந்தையை பார்த்து பயந்து தந்தை வெளி நபரை போல சில நாட்கள் கழிந்து தான் அவர்களிடம் செல்வார்கள். தந்தைக்கு ஏன் இந்த அவலமாக நிலை! இதனால் ஆண்கள் திருமணம் முடித்தாலே நிம்மதியில்லாமல் பணம் சம்பாதிக்கும் இயந்திரம் போல ஆகி விடுகிறார்கள்.
தந்தை பக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை வளர்த்தார்களானால்; அந்தக் குழந்தை நல்ல முறையில் வளரும். குடும்பத்தின் நலனுக்காக வெளி நாடு சென்று விட்டு தன் குடும்பமே சீர் குலைந்தால் அவர்கள் மிகப்பெரிய கைசேதத்தை அடையவேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு இல்லை என்றால் தன் குடும்பத்தோடு வெளிநாடு சென்று சம்பாதிக்க வசதி படைத்தவர்கள் குடும்பத்துடன் சென்று பொருளாதாரத்தை திரட்டுவதை இஸ்லாம் ஒரு போதும் தடுக்கவில்லை.
எனவே பெரிய அளவில் பொருள் திரட்டி தன் குடும்பத்தை பிரிந்து வாழ்வதை விட குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் சரி தன் குடும்பத்தோடு மகிழ்சியாக வாழ்வதே சிறந்தது என்பதை உணர்ந்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை மாற்றி அருள் புரிவானாக

fawzeen
elamalpotha
wahacotte
galewela
srilanka
+94775525685

முதலிரவின் முக்கியத்துவம்


fawzeen
elamalpotha
wahacotte
galewela
srilanka
+94775525685









முதலிரவின் முக்கியத்துவம்PrintE-mail

[ முந்தைய தலைமுறையில் ஆணும் பெண்ணும் தனி அறையில் விடப்பட்டதும், அந்த ஆண்மகன் பேசக்கூட தைரியமில்லாத பெண்ணிடம் தன் முழு பலத்தையும் காட்டிவிட்ட பின்பே வெளியே வருவான். அதுவும் ஒரு இயந்திரத்தனமான செக்ஸ் போட்டோலேஷன்தான். குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் உறவு என்கிற எண்ணத்தில்தான் கணவன்-மனைவி உறவு இருந்தது.
செக்ஸ் எஜுகேஷன் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் தேவை என்பது பலரது அனுபவத்தில் கண்ட போட்டோசல்ட். தலைமுறை இடைவெளியில் செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்புல இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்ற ACTION-ல இறங்கியிருப்பது வெல்கம்.
ராங் அப்ரோச்சுல ஆண்களை மட்டும் ஓரேயடியாக குறை சொல்ல முடியாது. ஃபர்ஸ்ட் நைட்டை குட் நைட்டாக மாற்றுவதும், பேட் நைட்டாக மாற்றுவதும் பெண்கள் கையில் இருக்க. ஒரு ஆணுக்கு தேவையான வசந்தங்களை சுமந்து கொண்டு வரும் பெண்களே அந்த ஆணிண் ஆசையை தீர்த்து வைக்கலாம் அல்லவா?
இன்றைய ஜெனரேஷனில் சம போட்டோமை இருந்தாலும் ராங் அப்ரோச் ரொம்பவே அதிகமாகிவிட்டது.]

சில ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஒரு பிரபலமான ஊரில் ஜும்ஆவின்போது ஒரு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதாவது: ‘இனி நமது ஊரில் 16 வயதுக்குக் கீழுள்ள பெண்ணுக்கு திருமணம் முடிக்க அனுமதி கிடையாது. ஊர் ஓலை எனும் திருமண அனுமதிக்கடிதமும் அளிக்கப்படமாட்டாது’. ஜும்ஆவுக்கு வந்திருந்த அத்தனைப்பேரும் கப்சிப். ஒருவர்கூட எதிர்த்து கேட்கவில்லை ஒரு கேள்வியைக்கூட!
ஏதோ வழமையாக அறிக்கையை காது கொடுத்து கேட்காமல் இருக்கும் பழக்கத்தில் இதனையும் எவரும் கண்டுகொள்ளவில்லை ஒருவரைத்தவிர!
ஆம்! அப்பொழுதுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்குத்திரும்பியிருந்த ஒரு இளைஞர் வீட்டிற்கு வந்ததும் ஒரு கடிதத்தை ஊர்தலைவருக்கு அனுப்பினார். அதில், ‘ஷரீஅத்துக்குப் புறம்பான இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு உங்களுக்கு அனுமதி வழங்கியது யார்? பெண்களுடைய விஷயத்தில் கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கே புதிதாக சட்டத்தை இயற்ற துணிவில்லாதபோது உங்களுக்கு எங்கிருந்து வந்தது இப்படியொரு துணிவு?’
கடிதம் எழுதிய அந்த இளைஞர் விசாரிப்பதற்காக அழைக்கப்பட்டார். அவர் அந்த சபைக்குள் நுழைந்ததுதான் தாமதம் அந்த ஊர்த்தலைவர் ‘ஷரீஅத் சட்டத்தையெல்லாம் மாற்றக்கூடிய அளவுக்கு நாங்கள் அதிகாரம் படைத்தவர்களல்ல. அதுபோன்ற சட்டத்தை நாங்கள் கொண்டுவருவதாக இல்லை. ஆகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று பதிலளித்தார்.
அந்த கடிதம் வரைந்த இளைஞருக்கு அந்த ஊர் தலைவர் மார்க்கத்திற்குப் புறம்பாக நடக்கக்கூடிய மனிதரல்ல என்று நன்றாகத் தெரியும். பிறகு ஏன் அவர் ஷரீஅத்துக்குப் புறம்பாக இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவர முயலவேண்டும்! தனிமையில் அவரைச்சந்தித்துப் பேசும்போதுதான் உண்மை விளங்கியது.
ஊர்த்தலைவர் (முதவல்லி) சொன்னார்: ‘சகோதரரே! நான் அந்த சட்டத்தை கொண்டுவர நினைத்ததற்குக் காரணம் இரண்டு. ஒன்று எங்கள் வீட்டுக்கருகில் ஒரு பள்ளிக்கூடம் உண்டு. அதில் மாணவிகளும் படிக்கிறார்கள். எனக்குத் தெரிந்த, சுமார் 14 வயதுடைய ஒரு மாணவியும் படித்துக் கொண்டிருந்தார். திடீரென்று சிலதினங்களாக அவரைக் காணவில்லை. விசாரித்ததில் அவர் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் முடித்துக்கொண்டு விட்டார் என்றார்கள். எனக்கோ அதிர்ச்சி. அந்த பெண் வயதுக்கு வந்தே ஒருவாரம் தானே இருக்கும். அதற்குள் ஏன் இப்படியொரு அவசரம். திருமணம் என்றால் என்னவென்றாவது அந்த இளம்பெண்ணுக்குப் புரியுமா?’
அடுத்து இரண்டாவது நிகழ்ச்சி: ‘ஒரு இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. முதலிரவில் மணமகனின் அரக்கத்தனமான நடவடிக்கையின் காரணமாக அந்த பெண் அரண்டு போய் கிட்டத்தட்ட பைத்தியக்காரி நிலைக்கு ஆளாகி விட்டாள். இதையெல்லாம் பார்த்த நான் ‘எமோஷனல்’ ஆகித்தான் 16 வயதுக்குக்கீழுள்ள பெண்கள் திருமணம் முடிப்பதற்கு இனி அனுமதி கிடையாது எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நினைத்தேனேயொழிய மற்றபடி நமது ஷரீஅத்தின் சட்டத்தை மாற்றுவதற்கு எனக்கோ வேறு எவருக்குமோ உரிமையில்லை’ என்று தனது மனத்தாங்கலை கொட்டினார்.
திருமணம் என்பது வெறுமனே ‘இருஉடற்சேர்க்கை’ மட்டுமல்ல என்பதை உணர்த்துவதற்காகத்தான் இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.
- நிர்வாகி, நீடூர்.இன்ஃபோ
பொதுவாக ஆண்வர்க்கம் பெண்ணின் உணர்ச்சிகளை-மனநிலையை மதிக்காமல், போட்டோந்துக் கொள்ளாமல் ஒரு செல்ஃபிஷ் செக்ஸ் உறவில் ஈடுபடுவதுதான் பெண் இனத்தின் குமுறல்கள். அதற்காக எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டவில்லை. அது அவர்களது குற்றமா? இயற்கையின் படைப்பில் நிகழந்ததாக இருந்தாலும், ஆண்களுக்கு போட்டோய வைப்பது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்.
பெரும்பாலும் முதலிரவில் தான் ''ஃபோர்ஸ் செக்ஸில்'' பெண்கள் வாழ்க்கையே வெறுத்து விடுகிறார்கள். மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த இளம்பெண்கள் அன்றைய தின முதலிரவில் இதயம் படபடக்க.... பயம் கலந்த வெட்கம், கூச்சம் இத்தனையும் சுமந்து கொண்டு எக்ஸாமினேஷனுக்கு போகும் ஸ்டூடண்ட் போல் நுழைவார்கள்.
அங்கே மணமகனோ பாய்ந்து கடித்து ஒருவழி பண்ணியாக வேண்டுமென்ற துடிப்போடு காத்திருப்பான். மண வாழ்க்கையின் முதல் தாம்பத்ய உறவு என்பது பலருக்கு வேதனை, சிலருக்கு இன்பம்.
ஒரு பெண்-ஆண் வாழ்க்கையில் முதல் இரவு வாழ்க்கையில் ஏற்படும் உறவு தான் மணவாழ்க்கையின் முதல் பரீட்சை, முதல் வசந்தம் எல்லாமே.
நமக்கு பசி எடுத்துவிட்டால், டைனிங் டேபிளில் வைக்கப்பட்ட சூடான உணவை மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது போல தான் செக்ஸ் அப்ரோச்சும். பெண் என்பவள் மலருக்கு சமம். தேனை குடிக்க வரும் வண்டு மலரை காயப்படுத்தாமல் அமர்ந்து தான் தேனை உறிஞ்சிவிட்டு பறக்கும். முன்பின் தெரியாத ஆணும், பெண்ணும் தனித்துவிடப்பட்ட அறையில் உணர்ச்சிகளுடன் விடப்படும் போது இறுக்கம் அதாவது பெண்ணின் டென்ஷனை போக்க மனம்விட்டு பேச வேண்டும்.
மென்மையான பேச்சு, டச்சிங் மூலம் உணர்ச்சிகளை தூண்டி அன்பு, பாசத்துக்கு பேசிக் டச் கொடுத்துவிட்டு பின்பு அப்ரோச் பண்ணினால் அந்த பெண்மையானது ஆணின் தாகத்தையும் தீர்த்துவிட்டு, தனக்குள் ஒரு சந்தோஷத்தை ஈர்த்துக் கொள்ளும்.
செக்ஸ் எஜுகேஷன் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் தேவை என்பது பலரது அனுபவத்தில் கண்ட போட்டோசல்ட். தலைமுறை இடைவெளியில் செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்புல இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்ற ACTION-ல இறங்கியிருப்பது வெல்கம்.
முந்தைய தலைமுறையில் ஆணும் பெண்ணும் தனி அறையில் விடப்பட்டதும், அந்த ஆண்மகன் பேசக்கூட தைரியமில்லாத பெண்ணிடம் தன் முழு பலத்தையும் காட்டிவிட்ட பின்பே வெளியே வருவான். அதுவும் ஒரு இயந்திரத்தனமான செக்ஸ் போட்டோலேஷன்தான். குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் உறவு என்கிற எண்ணத்தில்தான் கணவன்-மனைவி உறவு இருந்தது.
எனக்கு தெரிந்த ஒரு வயதான அம்மாவுக்கு எண்பது வயசு இருக்கும். அவங்களோட முந்தைய தலைமுறை உறவுகளை பற்றி கேட்டவுடன், அவங்களுக்கு கோபம் வந்திடுச்சு. அப்புறம், ஒரு ஆராய்ச்சிக்காக கேட்கிறேன் என்று சொன்னதும் தான் ஒப்பனா சொன்னாங்க. முந்தைய தலைமுறையில் பகலில் செக்ஸ் உறவுக்கு தடை. இரவில் விளக்கு வெளிச்சம் துளி கூட இல்லாமல் செக்ஸ் அப்ரோச். அதில்! பெண்ணின் உணர்ச்சிகளை ஓப்பனாக காட்டினால் குற்றம்.
''எங்க சுகத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது. அவங்க ஆசைய மட்டும் தீர்த்துட்டு போயிடுவாங்க. எப்படியோ ஆறு குழந்தைகளையும் படிக்க வெச்சு இப்போ பேரன் பேத்தி எடுத்தாச்சு''ன்னு சொன்னாங்க. முந்தைய தலைமுறையில பரஸ்பர செக்ஸ். அதாவது செக்ஸ் ACTION அப்ரோச்சுல சம போட்டோமை என்பது கிடையாது. இன்றைய ஜெனரேஷனில் சம போட்டோமை இருந்தாலும் ராங் அப்ரோச் ரொம்பவே அதிகமாகிவிட்டது.
ராங் அப்ரோச்சுல ஆண்களை மட்டும் ஓரேயடியாக குறை சொல்ல முடியாது. ஃபர்ஸ்ட் நைட்டை குட் நைட்டாக மாற்றுவதும், பேட் நைட்டாக மாற்றுவதும் பெண்கள் கையில் இருக்க. ஒரு ஆணுக்கு தேவையான வசந்தங்களை சுமந்து கொண்டு வரும் பெண்களே அந்த ஆணிண் ஆசையை தீர்த்து வைக்கலாம் அல்லவா?
ச்சீ..... வெட்கமாக இருக்குப்பா....... என்று சொல்வது நாணம். என்ன.... விளையாடுறீங்களா? நீங்க சொல்றபடி என்னால ஒத்துப் போக முடியாது என்று ஆண்களை விரட்டினால் என்ன ஆகும்?
பாலியல் சுகம் தரும் விலை மாதரை தேடி போவான். அப்புறம்..... எய்ட்ஸ்.....எய்ட்ஸ்...
fawzeen
elamalpotha

முழுமையான தாம்பத்தியம் எது?


fawzeen
elamalpotha
wahacotte
galewela
srilanka
+94775525685









முழுமையான தாம்பத்தியம் எது?PrintE-mail

[ தாம்பத்தியம் பற்றிய அற்புதமான விளக்கம், இக்கட்டுரை. இனிமையான இல்லற வாழ்வை நாடும் ஒவ்வொருவருக்கும்இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. - Adm.]
திருமணம், காதல், தாம்பத்யம் இவை எல்லாமே இறைவனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. மனிதகுலத்திற்கு இறைவன் வழங்கிய மகத்தான GIFT - பரிசு என்றே சொல்லலாம். இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது சாத்தியமாகிறது.
இரண்டு மனங்களை இணைப்பதே திருமணம். இந்த நோக்கம், இருவரும் இசைந்து தாம்பத்தியம் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது.
தாம்பத்யத்தின் வாயிலாக இருவரது உணர்வுகளும், சந்தோஷங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. கணவன் - மனைவிக்கு இடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இந்த தாம்பத்தியத்தின் வாயிலாக மறக்கப்படுகிறது.
இவ்வளவு புனிதமான, இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்யம் தற்போது மாறி வரும் உலகில் கணவன் - மனைவிக்கு இடையே எந்த இடத்தில் உள்ளது?
அதற்கெல்லாம் எங்கு நேரம் என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
பெயர், புகழ், பணம் சம்பாதிக்க நீண்ட தூரம், வேகமாக ஓட வேண்டிய நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். அதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச இங்கே யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த நேரத்தை தகவல் தொழில்நுட்பங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் விழுங்கி விடுகின்றன.
எதிர் வீட்டில் இருப்பவரைப் பற்றியோ, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறதோ என்பதையோ அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் இப்போதெல்லாம், அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை. அதிகாலையிலேயே பணிக்கு செல்வதும், இரவில் நேரம் கழித்து வருவதும் வழக்கமாகிவிட்டது.
குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறார்கள் என்றாலும், பிள்ளைகளிடம் கொஞ்சி மகிழவும், வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடவும் இயலாமல் போய்விடுகிறது. அதுபோன்றதொரு பொன்னான நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெற இயலாது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
காலத்தின் சூழ்நிலையால் மனிதன் எந்திரமாக மாறிவிட்டான். சக்கரம் போல் சுழலும் அவனது வாழ்க்கையில், எந்த இடத்திலும் சிறிது நேரம் களைப்பாறகூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் மனிதன் விரும்பும் பல நல்ல விஷயங்களை அவன் அறியாமலேயே இழந்து வருகிறான். இதில் தாம்பத்யமும் ஒன்று. இது மிகவும் சிந்திக்க வேண்டிய, கவலை அளிக்கும் விஷயமாகும்.
கணவன் - மனைவி இருவருமே பணிக்கு செல்லும் நிலை இப்போதுள்ளது. ஒருவர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டிருப்பதும், மற்றொருவர் பணியில் மூழ்கி இரவு - பகலென தெரியாமல் உழைப்பதும் இங்கெல்லாம் சாதாரணம்.
இதனால் கிடைப்பது என்ன? மிடுக்கான வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி, வெளிநாடுகளுக்கு பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு, நினைத்தப் பொருள் நினைத்தவுடன் கையில் என அனைத்தும் கிடைக்கும். ஆனால்... இதுதான் வாழ்க்கையா? இதில் மனம் நிறைவு பெறுமா? சரி இவற்றுக்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா? தாம்பத்ய வாழ்க்கை! இதற்கெல்லாம் தாம்பத்யம் ஈடாகுமா?
ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் தாம்பத்யம் தற்போது குறைந்து வருகிறது. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதற்கும், பல திருமணங்களின் உடனடி முறிவிற்கும் முக்கிய காரணமாக இந்த தாம்பத்யமே மையமாக அமைகிறது.
வாழ்க்கையில் முன்னேறவும், முக்கிய இடத்தை பிடிக்கவும் மனமும், உடலும் உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்த மனதிற்கும், உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கும் தாம்பத்தியத்தை பலர் மறந்தேவிட்டனர். "நேரம் இல்லை அதனால் செக்ஸ் இல்லை" என்பதே தற்போது பலர் சொல்லும் மந்திரமாகிவிட்டது.
மேலும் சில தம்பதிகளிடையே காலையில் எழுவதும், பணிக்கு செல்வதும், குழந்தைகளை பராமரிப்பதும் போல் தாம்பத்யமும் ஒரு பணியாக, அதனை கடமையாக எண்ணும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காலையில் இருந்து நாம் சந்திக்கும் பிரச்சினைகளும், பணிச் சுமையுமே ஆகும்.
இதுபோல் பணியிலும், தாங்கள் சார்ந்துள்ள துறையிலும் உள்ளவர்களை `பணிச் சிறையில் வாழ்பவர்கள்' என்றே அழைக்கலாம். இவர்கள் ஒரு நாளும் இந்த சிறையில் இருந்து விடுதலை ஆவதில்லை. இவர்கள் ஆயுள் கைதிகளாகவே இருந்து விடுகின்றனர். இதனால் இவர்களது திறமை வெளிப்பட்டு பெயர், புகழ் கிடைத்தாலும், உள்மனது அதற்கெல்லாம் மகிழ்ச்சியடைவதில்லை. அது உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல பல சமயங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை.
பணமும், புகழும், தங்களை சார்ந்தவர்களையும், தங்களது தேவைகளையும் திருப்திப்படுத்துமே தவிர, மனதையும், அதன் உணர்வுகளையும் அல்ல. பணத்தால் மனதை நிறைவு செய்ய இயலாது. பணம் தான் வாழ்க்கை என ஓடும் பலர் சிறிது நேரம் நின்று பார்த்தால் தெரியும், எவ்வளவோ பேர் பணம் கிடைத்தும் நிம்மதி இல்லாமல் நிம்மதியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பதை!
பலர் தங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளுடனே வீட்டிக்குள் நுழைகின்றனர். இது தவிர்க்க முடியாததே ஆனாலும், தள்ளி வைக்க வேண்டிய விஷயமாகிறது.
இதுபோன்று பணியாற்றும் தம்பதிகள் பலருக்கு வீடு ஒரு விடுதி போலவும், இரவு வருவதும், காலையில் கிளம்பிச் செல்வதும் வழக்கமாகிவிடுகிறது.
ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்கள் அறியாமலேயே அவர்களது தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
தங்களது நிறைகுறைகளை, இன்ப துன்பங்களை, கோபதாபங்களை தனது துணையுடன் பகிர்ந்து கொண்டு, அதற்காக நேரம் ஒதுக்குவதும் தான் நல்ல தாம்பத்தியம். நல்ல தாம்பத்யம் என்பதே இல்லற வாழ்வின் இனிய வாசற்படி. அதற்குள் நுழைந்தால்தான் குழந்தைகள், செல்வம் என்னும் வீட்டிற்குள் வாழ இயலும்.
மனித வாழ்க்கைக்கு ஆதாரமான தாம்பத்தியத்தை தொலைத்து விட்டு நாம் தேடப்போகும் பொருள்
தான் என்ன? இக்கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் மீண்டும் இக்கட்டுரையைப் படியுங்கள்.


யம் எது?PrintE-mail

[ தாம்பத்தியம் பற்றிய அற்புதமான விளக்கம், இக்கட்டுரை. இனிமையான இல்லற வாழ்வை நாடும் ஒவ்வொருவருக்கும்இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. - Adm.]
திருமணம், காதல், தாம்பத்யம் இவை எல்லாமே இறைவனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. மனிதகுலத்திற்கு இறைவன் வழங்கிய மகத்தான GIFT - பரிசு என்றே சொல்லலாம். இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது சாத்தியமாகிறது.
இரண்டு மனங்களை இணைப்பதே திருமணம். இந்த நோக்கம், இருவரும் இசைந்து தாம்பத்தியம் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது.
தாம்பத்யத்தின் வாயிலாக இருவரது உணர்வுகளும், சந்தோஷங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. கணவன் - மனைவிக்கு இடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இந்த தாம்பத்தியத்தின் வாயிலாக மறக்கப்படுகிறது.
இவ்வளவு புனிதமான, இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்யம் தற்போது மாறி வரும் உலகில் கணவன் - மனைவிக்கு இடையே எந்த இடத்தில் உள்ளது?
அதற்கெல்லாம் எங்கு நேரம் என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
பெயர், புகழ், பணம் சம்பாதிக்க நீண்ட தூரம், வேகமாக ஓட வேண்டிய நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். அதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச இங்கே யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த நேரத்தை தகவல் தொழில்நுட்பங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் விழுங்கி விடுகின்றன.
எதிர் வீட்டில் இருப்பவரைப் பற்றியோ, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறதோ என்பதையோ அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் இப்போதெல்லாம், அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை. அதிகாலையிலேயே பணிக்கு செல்வதும், இரவில் நேரம் கழித்து வருவதும் வழக்கமாகிவிட்டது.
குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறார்கள் என்றாலும், பிள்ளைகளிடம் கொஞ்சி மகிழவும், வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடவும் இயலாமல் போய்விடுகிறது. அதுபோன்றதொரு பொன்னான நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெற இயலாது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
காலத்தின் சூழ்நிலையால் மனிதன் எந்திரமாக மாறிவிட்டான். சக்கரம் போல் சுழலும் அவனது வாழ்க்கையில், எந்த இடத்திலும் சிறிது நேரம் களைப்பாறகூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் மனிதன் விரும்பும் பல நல்ல விஷயங்களை அவன் அறியாமலேயே இழந்து வருகிறான். இதில் தாம்பத்யமும் ஒன்று. இது மிகவும் சிந்திக்க வேண்டிய, கவலை அளிக்கும் விஷயமாகும்.
கணவன் - மனைவி இருவருமே பணிக்கு செல்லும் நிலை இப்போதுள்ளது. ஒருவர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டிருப்பதும், மற்றொருவர் பணியில் மூழ்கி இரவு - பகலென தெரியாமல் உழைப்பதும் இங்கெல்லாம் சாதாரணம்.
இதனால் கிடைப்பது என்ன? மிடுக்கான வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி, வெளிநாடுகளுக்கு பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு, நினைத்தப் பொருள் நினைத்தவுடன் கையில் என அனைத்தும் கிடைக்கும். ஆனால்... இதுதான் வாழ்க்கையா? இதில் மனம் நிறைவு பெறுமா? சரி இவற்றுக்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா? தாம்பத்ய வாழ்க்கை! இதற்கெல்லாம் தாம்பத்யம் ஈடாகுமா?
ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் தாம்பத்யம் தற்போது குறைந்து வருகிறது. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதற்கும், பல திருமணங்களின் உடனடி முறிவிற்கும் முக்கிய காரணமாக இந்த தாம்பத்யமே மையமாக அமைகிறது.
வாழ்க்கையில் முன்னேறவும், முக்கிய இடத்தை பிடிக்கவும் மனமும், உடலும் உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்த மனதிற்கும், உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கும் தாம்பத்தியத்தை பலர் மறந்தேவிட்டனர். "நேரம் இல்லை அதனால் செக்ஸ் இல்லை" என்பதே தற்போது பலர் சொல்லும் மந்திரமாகிவிட்டது.
மேலும் சில தம்பதிகளிடையே காலையில் எழுவதும், பணிக்கு செல்வதும், குழந்தைகளை பராமரிப்பதும் போல் தாம்பத்யமும் ஒரு பணியாக, அதனை கடமையாக எண்ணும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காலையில் இருந்து நாம் சந்திக்கும் பிரச்சினைகளும், பணிச் சுமையுமே ஆகும்.
இதுபோல் பணியிலும், தாங்கள் சார்ந்துள்ள துறையிலும் உள்ளவர்களை `பணிச் சிறையில் வாழ்பவர்கள்' என்றே அழைக்கலாம். இவர்கள் ஒரு நாளும் இந்த சிறையில் இருந்து விடுதலை ஆவதில்லை. இவர்கள் ஆயுள் கைதிகளாகவே இருந்து விடுகின்றனர். இதனால் இவர்களது திறமை வெளிப்பட்டு பெயர், புகழ் கிடைத்தாலும், உள்மனது அதற்கெல்லாம் மகிழ்ச்சியடைவதில்லை. அது உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல பல சமயங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை.
பணமும், புகழும், தங்களை சார்ந்தவர்களையும், தங்களது தேவைகளையும் திருப்திப்படுத்துமே தவிர, மனதையும், அதன் உணர்வுகளையும் அல்ல. பணத்தால் மனதை நிறைவு செய்ய இயலாது. பணம் தான் வாழ்க்கை என ஓடும் பலர் சிறிது நேரம் நின்று பார்த்தால் தெரியும், எவ்வளவோ பேர் பணம் கிடைத்தும் நிம்மதி இல்லாமல் நிம்மதியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பதை!
பலர் தங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளுடனே வீட்டிக்குள் நுழைகின்றனர். இது தவிர்க்க முடியாததே ஆனாலும், தள்ளி வைக்க வேண்டிய விஷயமாகிறது.
இதுபோன்று பணியாற்றும் தம்பதிகள் பலருக்கு வீடு ஒரு விடுதி போலவும், இரவு வருவதும், காலையில் கிளம்பிச் செல்வதும் வழக்கமாகிவிடுகிறது.
ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்கள் அறியாமலேயே அவர்களது தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
தங்களது நிறைகுறைகளை, இன்ப துன்பங்களை, கோபதாபங்களை தனது துணையுடன் பகிர்ந்து கொண்டு, அதற்காக நேரம் ஒதுக்குவதும் தான் நல்ல தாம்பத்தியம். நல்ல தாம்பத்யம் என்பதே இல்லற வாழ்வின் இனிய வாசற்படி. அதற்குள் நுழைந்தால்தான் குழந்தைகள், செல்வம் என்னும் வீட்டிற்குள் வாழ இயலும்.
மனித வாழ்க்கைக்கு ஆதாரமான தாம்பத்தியத்தை தொலைத்து விட்டு நாம் தேடப்போகும் பொருள்
தான் என்ன? இக்கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் மீண்டும் இக்கட்டுரையைப் படியுங்கள்.
fawzeen
elamalpotha