Thursday, August 18, 2011

கணவன் மனைவி ஆசை குறைகிறது



கணவன் மனைவி ஆசை குறைகிறதுPrintE-mail
கணவன்மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான்இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன்மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார்.
வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும்பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோஇறைச்சியோ இருக்கும்அதை எடுத்து சமையல் செய்யவேண்டும்.
மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும்வீட்டை சுத்தம் செய்தல்,பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள்.
அதோடு நின்று விடுவதில்லைகுழந்தை படித்துக்கொண்டிருக்கும்அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.
இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார்அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார்.கணவன்மனைவி இருவர் நேரமும் வேலைஅலுவலகம்குழந்தைடெலிவிஷன் நிகழ்ச்சிஉறவினர்கள் வட்டம்வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன்மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. ]
ஒரு பெண்ணின் இதயம்,
முதுமை அடைவதே இல்லை.
அன்பு செலுத்துவதை அது நிறுத்தி விட்டால்அது
வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது.
கணவன்மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும்மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதுஇருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும்பிரச்சினைகளும்சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்குசம்பிரதாயம் போல் ஆகிவிட்டதுஇந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன்மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்.
நகரத்தில் வாழும் 44% திருமணமான ஆண்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருக்கிறதுஇதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறதுமேற்கண்டவர்களில் 29 %பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள்அவர்களில் பெரும்பாலானவர்கள் வேளையிலே மிகவும் சோர்ந்துபோகிறார்கள்வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறார்கள்அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள்.
இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடுதங்கள் மனைவிகளின் உணர்வுகளையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறதுஇப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும்,அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன்மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும்முடிவில் ஆசையே குறைந்துபோய்`திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?' -என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறதுமட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''.
நேரமின்மை:
கணவன்மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான்இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன்மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார்வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும்பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோஇறைச்சியோ இருக்கும்அதை எடுத்து சமையல் செய்யவேண்டும்மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும்.வீட்டை சுத்தம் செய்தல்பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள்அதோடு நின்று விடுவதில்லை.குழந்தை படித்துக்கொண்டிருக்கும்அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.
இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார்அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார்.கணவன்மனைவி இருவர் நேரமும் வேலைஅலுவலகம்குழந்தைடெலிவிஷன் நிகழ்ச்சிஉறவினர்கள் வட்டம்வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன்மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது.
அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய்எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்கணவனும்மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோஅவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோஅவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறதுஅதிக சோர்வுகளைப்புமறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள்.
அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால்அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறதுஇதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறதுகணவர்மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோஅவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும்.அதனால் உறவுவலி நிறைந்த அவஸ்தையாக மாறிஉடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.
பலகீனநிலை:
வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும்பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறதுஅந்த சோர்வு நிலைஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும்இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால்அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும்.அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும்அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.
உடற்கூறு அறிவின்மை:
ஆண்களும்பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும்பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள்ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும்பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லைஇப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள்அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள்அப்போது உள்ளாடை அணிகிறார்கள்அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்லஅதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.
ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாதுவிரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாதுஇறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது.விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும்.உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறதுஅதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.
இப்போது வாழ்க்கை சூழல்வாழும் முறைஉடை கலாசாரம்உணவுக் கலாசாரம்போட்டி மனப்பான்மை,மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்-மனைவி நேசத்திற்கும்படுக்கை அறை உறவுக்கும்,திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறதுஅதை எல்லாம் உணர்ந்து கணவனும்,மனைவியும் நடந்து பாசத்தையும்நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்
ஒரு பெண்ணின் இதயம்முதுமை அடைவதே இல்லை.
அன்பு செலுத்துவதை அது நிறுத்தி விட்டால்அது
வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது.

No comments: